குமரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்து கூறியுள்ளனர்.
முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரம்ஜான் பண்டிகைகளில் முக்கியமானது நோன்பு இருப்பது ஆகும். இந்த பண்டிகைக்காக முஸ்லிம்கள் அந்த மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். இந்நிலையில் ஷவ்வால் என்னும் மாதபிறை தெரிந்தவுடன், இந்த பண்டிகையை முஸ்லிம்கள் எளிமையாக கொண்டாடியுள்ளனர்.
இதனையடுத்து கேரளாவிலும், அதன் அருகிலுள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து இந்த பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் முஸ்லிம்கள் வீடுகளிலே சிறப்பு தொழுகை நடத்திருக்கின்றனர். இவ்வாறு தொழுகை நிறைவுபெற்றதும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் பண்டிகை வாழ்த்தை கூறியுள்ளனர்.