ஜமைக்காவில் அம்பேத்கரின் பெயர் கொண்ட சாலையை இந்திய அதிபரான ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்திருக்கிறார்.
இந்திய நாட்டின் ஜனாதிபதி, ஜமைக்கா நாட்டிற்கு 4 நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் பேட்ரிக்-உடன் தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுற்றுலா, விளையாட்டு மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளுக்கான ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பில் பேசியிருக்கிறார்.
மேலும் அங்கு அம்பேத்கரின் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் சாலையை திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கடல் கடந்து அம்பேத்கரின் புகழ் பரவியுள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன். மார்கஸ் கார்வே, அம்பேத்கர் ஆகியவர்களை ஒரு தேசத்திற்கானவர்களாகவோ, சமூகத்திற்கானவர்களாகவோ கூற முடியாது.
அனைவருக்கும் சமமான உரிமை வேண்டும் என்பதற்காக ஒலித்த அவர்களின் குரல், பாகுபாட்டை ஒழிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி, உலக அளவில் தாக்கத்தை உண்டாக்கியிருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய நாட்டின் ஜனாதிபதி ஜமைக்கா நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை. அந்த பெருமை ராம்நாத் கோவிந்திற்கு கிடைத்திருக்கிறது.