Categories
சினிமா தமிழ் சினிமா

டிவி பிரபலத்துக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்…!

நடிகை, பாடகி, ரியாலிட்டி ஷோ நடுவர் என கலக்கி வரும் ரம்யா நம்பீசன் இரண்டாவது முறையாக டிவி பிரபலத்துக்கு ஜோடியாகியுள்ளார்.

பயணக் கதையாக உருவாகும் படத்தில் கதாநாயகியாகியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் – யுவன் ஷங்கர் ராஜா புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.பயணக் கதையாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக டிவி பிரபலம் ரியோ ராஜ் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் ஹீரோவாகத் தோன்றினார்.

இதைத் தொடந்து இப்படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். முன்னதாக, கவின் நடிப்பில் வெளியான ‘நட்புனா என்னனு தெரியுமா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் டிவி பிரபலத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |