Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யா- சோம் திருமணம் செய்து கொள்வார்களா?… ரசிகரின் கேள்வி… பதிலளித்த ரம்யாவின் சகோதரர்…!!!

டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ரம்யா பாண்டியனின் சகோதரர் பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் . இவர் ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதன்பின் ரம்யா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளரான சோம் சேகருடன் காதலில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது .

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற பிரீஸ் டாஸ்க்கின் போது ரம்யாவை காண வந்த அவரது சகோதரர் பரசு பாண்டியன் சோம் சேகரை மச்சான் என அழைத்துள்ளார். மேலும் பரசு பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘தங்கமான மனுஷன் சோம் சேகர் அவருடன் நேரம் செலவிட்டது நன்றாக இருந்தது’ என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர் ஒருவர் ரம்யா , சோம் சேகர் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? என கேள்வி கேட்க அதற்கு பதிலளித்த ரம்யாவின் சகோதரர் ‘அது அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |