பாடல் பாடும் டாஸ்கில் ரம்யா பாண்டியனை தளபதி விஜய் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டி சற்று கடினமாகவே இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு TICKET TO FINALE என்பதால் மும்முரமாக விளையாடுகிறார்கள். தற்போது வரை நான்கு டாஸ்குகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் அதில் பலவற்றில் ரம்யா நல்ல இடத்தை பிடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடந்த பாடல் பாடும் டஸ்கில் அவர் பெரிதாக பாடவில்லை என்றாலும் மற்றவர்களை விட நல்ல இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த தஸ்கின் இறுதியில் ஆரி, சோம், மற்றும் ரம்யா ஆகியோர் ஒரே மதிப்பெண் பெற்றதால் டை பிரேக்கர் சுற்று வைக்கப்பட்டது. அப்போது தளதிபதியின் குட்டி ஸ்டோரி பாடல் போடப்பட்டது. அப்போது ரம்யா அதை சரியாக கண்டுபிடித்து விட்டார்.
அதனால் ரம்யா தன்னை தளபதி விஜய் காப்பாற்றியதாக கூறினார். இதையடுத்து பாலாஜி கடைசி இடம் பிடித்துள்ளார். இதனால் அவர் கடும் வருத்தத்தில் இருந்தார். தேவையில்லாமல் அவரை பலமுறை பசரை அழுத்தியதால் அவருக்கு அதிக அளவில் நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. எனவே ரம்யா பாலாவிடம் தற்போது நான்கு டாஸ்குகள் மட்டுமே முடிந்திருக்கிறது. இன்னும் பல டாஸ்க் இருக்குது. அதனால் வறுத்தபடாத என்று ஆறுதல் கூறி வருகிறார்.