Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யாவின் மொக்க ஜோக்கை கலாய்த்த பிக்பாஸ்… கைதட்டி சிரித்த ஹவுஸ் மேட்ஸ்… வெளியான அன்சீன் புரோமோ…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் இன்றைய எபிசோடு கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது . தற்போது வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளதால் பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது . இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் இன்றைய எபிசோடுக்கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் டாஸ்க் லெட்டரை நிஷா வாசிக்க அப்போது ‘பின்குறிப்பு’ என்று கூறியதற்கு ‘சேஃப்டி பின்னா?’ என கவுண்டர் கொடுக்கிறார் ரம்யா.

இதனால் ஆச்சரியமடைந்த நிஷா எப்படி பிக்பாஸ் ?என்றவாறு ‘பின் குறிப்புன்னு சொல்லுங்க சேஃப்டி பின்னா? ன்னு ஒருத்தங்க கேப்பாங்க அவங்ககிட்ட இது பழைய ஜோக் இதெல்லாம் சொல்லாதீங்க ரிப்பீட் வந்துடுச்சுன்னு  சொல்லுங்க’ என்று பிக்பாஸ் சொல்லி அனுப்பியதாக கூறுகிறார். பிக்பாஸ் கலாய்த்ததால் போட்டியாளர்கள் அனைவரும் கைத்தட்டி சிரிக்கின்றனர் . இதன்பின் ‘என்னை பத்தி நீங்க நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க பிக் பாஸ்’ எனக் கூறி மழுப்புகிறார் ரம்யா.

Categories

Tech |