ரம்ஜான் திருநாள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இல்லாமல் உலகம் முழுக்க இருக்கும் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக கருதப்பட்டு வருகின்றது. ரம்ஜான் திருநாள் எதற்காக நோன்பு வைத்திருக்கிறோம்? நோன்பு இருக்கும் போது உணவு மட்டுமல்ல பொய் மற்றும் புறம் பேசுதல் மோசடி செய்வது, கேட்டதை பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விலக்கி வைக்கின்றோம்.
ஏழைகளின் பசியை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு கட்டாயமாக இல்லை அப்படி இருந்திருந்தால் ஏழைக்கு விலக்கு அளிக்கப்படும். மனிதன் தன்னைத்தானே வருத்திக் கொள்வது இறைவனின் விருப்பமும் இல்லை நபிகள் நாயகம் தோழன் கணக்கின்றி நோன்பு வைத்திருந்தார். இதை அறிந்த நபிகள் நாயகம் ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பது கடமை மற்ற நாள்களில் மாதக்கணக்கில் நோன்பு வைப்பது வேண்டாம் என கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல குடும்ப நலத்தையும் கவனிப்பது ரொம்ப ரொம்ப அவசியம். அதனால் நோன்பின் நோக்கம் மனிதனை பக்குவப்பட வைக்க வேண்டும் என்பதுதான். அதே நேரம் நோன்பு வைப்பதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் நமது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகவும் கருதப்பட்டு வருகிறது. ஆன்மீக வழிகாட்டுதல் மட்டுமே இஸ்லாம் நோக்கம் கிடையாது. அதையும் தாண்டி பல விஷயங்களை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
தண்ணீரை வீண் விரயம் செய்யக்கூடாது என குர்ஆனில் வசனம் இருக்கின்றது. இந்த வசனத்திற்கும் மனிதனின் பக்குவம் பெற்ற செயலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. மறுமை நாளில் இறைவன் கேட்கும் கேள்விகளில் ஒன்று உன் கல்வித்தகுதி எப்படி பயன்பட்டது என்று தான் மார்க்க கல்வியை மட்டுமே இறைவன் குறிப்பிடுகிறான் என நினைத்தால் அது தவறு. இந்த உலக தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நாம் கற்ற கல்வியையும் சேர்த்தே அந்த கேள்வியை இறைவனின் எழுப்பி உள்ளார்.
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் விளக்கமும் கொடுத்து உள்ளார். நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பயன்படும் வகையில் மட்டுமே வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க நினைக்காதீர்கள். அந்த கல்வியை பிறருக்கு கற்றுத் தாருங்கள். அந்தக் கல்வியால் மற்றவருக்கு நன்மை தரும் செயல்களை செய்யுங்கள் என கூறியுள்ளார். இன்றைய வேகமான உலகில் ஒவ்வொருவரும் வெற்றிபெற ஓடிக்கொண்டிருகிறார்கள்.
வட்டி பற்றியெல்லாம் யோசித்தால் ஆகாது எனக் கூறுபவர்கள் உண்டு. வட்டியை ஏன் இறைவன் தடுத்தான் என்பதை பார்க்க வேண்டும். ஏழைகளை மேலும் ஏழையாக்கி அவர்களை சுரண்டும் கொடூரம் தான் வட்டி என இஸ்லாம் பயங்கரமாக வட்டியை பற்றி சொல்லியுள்ளது. பிறருக்கு உதவி செய்கின்றேன் எனக் கூறிக்கொண்டு அந்த நபருக்கு தீங்கு செய்தால் அதால் சந்தோஷம் அடைய முடியுமா?
வட்டி வாங்குவது கொடுப்பது இரண்டுமே இஸ்லாம் ரொம்ப கடுமையாக தடுத்து வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? மேலும் வட்டி இல்லா வாழ்க்கை தான் ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை என இஸ்லாமில் ஒரு வசனமே இருந்து வந்தது. இப்படி மனிதன் பக்குவபட வேண்டிய பல செயல்களை வலியுறுத்துவதற்காக தான் இந்த இஸ்லாம் மதத்தின் நோன்பு என சொல்லி வல்லுநர்கள் கூறுகின்றனர்.