Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

ரம்ஜான் நோன்பு எதற்காக? ரம்ஜான்எதற்காக கொண்டாடப்படுகிறது?

இறைவன் இஸ்லாமிய மக்களுக்கு இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளார். அதில் ஒன்று தியாக திருநாள் மற்றொன்று ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் விமர்சையாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ரமலான் ரம்ஜான் என சொல்லப்படும் ஈகைத் திருநாள். இஸ்லாமியர்கள் இருபெரும் நாட்களில் ஒன்று இஸ்லாமியர்கள் தங்கள் புனித மாதமான ரமலான் முழுவதும் நோன்பிருந்து அதாவது பகல் நேரத்தில் மட்டும் உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல், பொய் புறம் பேசாமல், மோசடி, போன்றவற்றை தவிர்த்து கெட்டதை பேசுவதை தவிர்த்து, சினிமா பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது போன்ற அனைத்தையும் விலக்கி வைப்பது தூய்மையான நோன்பு  திறந்து கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும் அன்பையும் இந்த திருநாளில் கொண்டாடுகிறார்கள் .

முஸ்லிம்களுக்கு நோன்பு என்பது பெரிய கடமை, நோன்பு என்பது பசித்து  இருப்பது அல்லது தண்ணீர் அருந்தாமல் இருப்பது மட்டுமல்ல. இறை அச்சத்தை ஏற்படுத்துவது என்பதற்காக அல்குர்ஆன் தெரியப்படுத்துகிறது. ஏழைகளின் பசிக்கு  உணவு வேண்டும் என்பதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நபி தோழரான அப்துல் நாள் கணக்கின்றி நோன்பு வைத்திருந்தார் மனிதன் இப்படி தன்னைத்தானே வருத்திக் கொள்வது இறைவனுக்கு விருப்பம் என்றால் கிடையாது என்பது தான் உண்மை. இதனை அறிந்த நபிகள் ரம்ஜான் மாதத்தில் மட்டும் நோன்பு வைப்பது கடமை மற்றபடி நாள் மாதக்கணக்கில் நோன்பு வைக்க வேண்டாம் என்றும் உங்கள் உடல்நலத்தையும் குடும்பத்தையும் கவனிப்பது அவசியம் எனக் கூறினார்.

அதனால் நோன்பின் நோக்கம் என்பது மனிதன் பக்குவப்பட வேண்டும் என்பதற்காக மட்டும் தானே தவிர இஸ்லாமியர்கள் தன்னைத்தானே வருத்திக் கொள்வதற்காக அல்ல. இவ்வாறு நோன்பு இருப்பதால் ஏற்படும் மாற்றம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு ஐந்து கடமை உள்ளன இதை கடைப்பிடிப்பவர்கள் முஸ்லிம்களாகவே இருக்க முடியாது எனக் கூறுகிறார்கள். கலிமா, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதை நம்புவது. தொழுகை தினமும் ஐந்து வேளை அல்லாவை தொழுவது. நோன்பு ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது. சகாத், ஏழைகளுக்கு உதவுவது. ஹஜ்ஜு, இஸ்லாமியர்களுக்கான புனித யாத்திரை.

ரமலான் மாதம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை முக்கியமான மாதமாக கருதப்படுகின்றது. ரமலான் மாதத்தில் தொடர்ந்து நோன்பு திருநாளை பெருநாள் என்றும்  ஈகைத் திருநாள் என்றும் ரம்ஜான் திருநாள் என்றும் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் இருக்கும் மனிதர்கள் எங்கு இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் என்பது அனைவராலும் அறியப்பட்ட உண்மையை முஸ்லிம்கள் நமக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும், சகோதராகவும் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |