Categories
சினிமா தமிழ் சினிமா

புலி வேட்டைக்குத் தயாராகிய ‘ரேஞ்சர்’ சிபிராஜ்

சிபிராஜ் நடிப்பில் தரணிதரன் இயக்கும் ‘ரேஞ்சர்’ திரைப்படம் பற்றிய புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிபிராஜ் நடிப்பில், ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி படங்களின் இயக்குநர் தரணிதரனின் இயக்கத்தில், உருவாகிவரும் படம் ‘ரேஞ்சர்’.

மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் மனிதர்களைக் கொன்று தின்று மாமிச வேட்டையாடிவந்த அவ்னி எனும் புலி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சம்பவத்தை கதைக்களமாகக்கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. இதில் ரம்யா நம்பீசன், மதுஷாலினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Ranger Movie

ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பிசாசு படப்புகழ் அரோல் கொரோலி இசையமைக்கிறார். கல்யாண் வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது பெரும்பாலான படக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் பாடல் காட்சிகளும் மற்ற காட்சிகளும் விரைவில் நிறைவுபெறும் என்றும் படத்தின் இயக்குநர் தெரித்துள்ளார்.

ஏற்கனவே ரேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிபிராஜ் நடிப்பில் வெளியாகவிருக்கும் வால்டர் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மேலும் இந்தாண்டு அவர் நடிப்பில் கடபதாரி, ரங்கா, மாயோன், வட்டம் ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.

Categories

Tech |