Categories
சினிமா தமிழ் சினிமா

முக்கிய திரைப்பிரபலங்கள் வெளியிட்ட ”ரங்கோலி” படத்தின் போஸ்டர்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வாலி மோகன்தாஸ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”ரங்கோலி”. இந்த படத்தை கோபுரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக கே. பாபு ரெட்டி மற்றும் ஜி. சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி வாலி மோகன்தாஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரார்த்தனா மற்றும் ஹமரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை முக்கிய திரைப்பிரலங்களான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், அதர்வா, வாணி போஜன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |