கரீனாவுடனான டேட்டிங் காலத்தில் ஒன்றாக வசித்தபோது பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க நடிகையும், தோழியுமான ராணி முகர்ஜி, தனக்கு வழங்கிய டிப்ஸ் குறித்து நடிகர் சயீப் அலிகான் வெளிப்படுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகரான சயீப் அலி கான் – ராணி முகர்ஜி ஆகியோர் டா ரா ரம் பும், ஹம் தும் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது இருவரும் நட்பாக பழகியதுடன், சயீப்புக்கு ஏராளமான அறிவுரைகளையும் ராணி வழங்கினாராம்.
இதுகுறித்து சயீப் அலிகான் ‘வாட் உமன் வாண்ட் 2’ என்ற நிகழ்ச்சியில் கூறியதாவது: நான் கரீனாவுடன் டேட்டிங்கில் ஈடுபட்ட தொடக்க காலத்தில், பாலின பேதம் பார்க்காமல் ஒரு ஆணுடன் பழகுவது போலவும், ஆண் நண்பருடன் இருப்பதுபோலவும் சகஜமாக நடந்து கொள்ளுமாறு ராணி முகர்ஜி அறிவுரை வழங்கினார்.
கரீனாவை சமமாக நடத்துமாறு கூறியதுடன், இரண்டு ஹீரோக்கள் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
இருவரும் வேலைக்கு சென்று வருகிறார்கள். எனவே அவர்கள் இருவருக்குள்ளும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று ராணி முகர்ஜி கூறியதை நினைவுபடுத்தினார்.
அத்துடன் பல சுவராஸ்யமான விஷயங்களை பகிர்ந்த சயீப் அலி கான் தொடர்ந்து பேசும்போது, திரைப்படங்களில் நான், கரீனா ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் வரும் பொறுப்புகள் பற்றி பல வகையில் உணர்த்தியது.
திட்டமிட்டு விடுமுறையை எப்படி கொண்டாடுவது என்பதில் கரீனா வல்லவர். நேரத்தை பயனுள்ளதாக அவர் கழிப்பது கண்டு வியந்துள்ளேன். அதற்கு அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக விடுமுறை திட்டமிடலை அவரிடமே விட்டுவிடுவேன் என்றார்.
சயீப் அலிகான் மனைவி கரீனா கபூர்தான் ‘வாட் உமன் வாண்ட் 2’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். இதில், பிரபலங்களை அழைத்து அவர்களிடம் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து உரையாடி வருகிறார்.
இதையடுத்து சமீபத்திய நிகழ்ச்சி அவரது கணவர் சயீப் அலிகான் விருந்தினராக வந்து, காதல் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை நினைவுபடுத்தி இருக்கிறார். 104.8 இஸ்க் எஃப் சார்பில் தயாரிக்கப்படும் இந்த நிகழ்ச்சியானது அதன் யூடியூப் சேனலிலும், மொபைல் செயலியிலும் ஒளிபரப்பாகிறது.