இலங்கை முன்னாள் அதிபரான ரணில் விக்ரமசிங்கே ஒன்பதாவது தடவையாக நேற்று எம்.பி ஆக பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையில், கடந்த 1977 ஆம் வருடத்திலிருந்து நடந்த அனைத்து பாராளுமன்ற தேர்தலிலும் எம்.பியாக வெற்றி பெற்றவர் என்ற சாதனையை ரணில் விக்ரமசிங்கே நிகழ்த்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக, கடந்த 1977 வருடத்தில் முதல் தடவையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் உறுப்பினரானார்.
அதனைத்தொடர்ந்து, கடந்த 1994 ஆம் வருடத்தில், அந்த கட்சியின் தலைவராக பதவியேற்றுள்ளார். 4 தடவை பிரதமராக இருந்த, இவர் கடந்த 2020 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் இவரது கட்சி வாக்குகள் பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில், எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.