உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
1954 நவம்பர் 18ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்த இவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞ்சராக தனது பணியை தொடங்கிய ரஞ்சன் கோக்காய், அதே நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு பஞ்சாப் , அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளையும் , பல்வேறு சர்ச்சைகளும் சந்தித்திருந்தார். அவருக்கு எதிரான பாலியல் தொடர்பான வழக்குகள் வந்தது. அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளையும் தீர்ப்பையும் வழங்கி கடந்த நவம்பர் மாதம் தனது பணியினை நிறைவு செய்தார்.
இந்நிலையில் தற்போது மாநிலங்களவைக்கு உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இவரை மாநிலங்களவை நியமன எம்பியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதனால் சட்டப்பணியை முடித்த இவர் மக்கள் பணியை ஆற்ற இருக்கின்றார்.