முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் நியமன எம்.பியாக பதவியேற்றத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோக்காய் அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பையும் வழங்கி கடந்த நவம்பர் மாதம் தனது பணியினை நிறைவு செய்தார்.இந்நிலையில் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து இன்று மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் முதல் நிகழ்வாக ரஞ்சன் கோக்காய் எம்.பியாக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷங்கள் எழுப்பின. ஆனால் அவர் பதவி ஏற்றுக் கொண்டதால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.