தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடலை இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரசிகர்கள் ரீல்ஸ் செய்துள்ளனர். இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது 100k -வை தாண்டியுள்ளது. மேலும் இந்த தகவலை பட குழுவினர் மகிழ்ச்சியுடன் தங்களுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Ranjithame crosses 100K+ reels on @instagram now🤩#RanjithameAudio▶️ https://t.co/Rf4LK1G8fo#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #Varisu #VarisuPongal pic.twitter.com/0L3hG3MyAI
— Sri Venkateswara Creations (@SVC_official) December 17, 2022