Categories
சினிமா தஞ்சாவூர் தமிழ் சினிமா மாநில செய்திகள்

கைதாகிறார் இயக்குநர் ரஞ்சித் “தடையை நீடிக்க முடியாது” நீதிமன்றம் உத்தரவு …!!

ரஞ்சித்தின் கைது தடையை நீடிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ளதிருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்.

Image result for ராஜராஜ சோழன் RANJITH

இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட்து.அதில் தான் கூறியது பல்வேறு ஆவங்களில் இருந்த வரலாற்று உண்மை என்றும் , இதே கருத்துக்களை பலரும் பேசியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த வழக்கில் பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Image result for சென்னை உயர்நீதிமன்ற

ரஞ்சித்தின் கைது தடை இன்றோடு முடிவடையும் சூழலில் இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சேகரிக்க கால அவகாசம் வேண்டும் எனவே கைது தடையை நீடிக்க வேண்டுமென்று  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு  நீதிபதி ராஜா மாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஞ்சித்தை கைது செய்யமாட்டோம் என்ற தமிழக காவல்துறையின் உத்தரவை சுட்டிக்காட்டி வரும் திங்கள் கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Image result for சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

மேலும் இது தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதால் கைதுக்கான தடையை நீடிக்க வேண்டுமென்று ரஞ்சித் தரப்பில் கோரப்பட்ட நிலையில் திருப்பனந்தாள்  காவல்நிலைய  வழக்கு தொடர்பாக அரசு அளித்த உறுதியை சுட்டிக்காட்டி கைது தடையை நீடிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பனந்தாள் காவல்நிலையம் தவிர வேறு ஏதேனும் காவல்நிலையத்தில் வழக்கு இருந்தால் இயக்குனர் பா.ரஞ்சித் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.

Categories

Tech |