Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறந்த சேவை ஆற்றுவார்” பயிற்சிகள் நிறைவு…. சிறப்பாக நடைபெற்ற விழா….!!

பயிற்சி முடித்து சென்ற ராணுவ அதிகாரிகளுக்கு வழியனுப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை பகுதியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்படுகின்ற இளம் ராணுவ அதிகாரிகளுக்கும் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வருடம் தோறும் இங்கு பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 41 பெண்கள், 125 ஆண்கள் என மொத்தமாக 166 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் நட்பு நாடுகளில் வசிக்கும் 26 பெண் அதிகாரிகள் மற்றும் 4 ஆண் அதிகாரிகள் உள்பட 30 நபர்கள் உள்ளனர்.

இதனை அடுத்து கடந்த 49 வாரங்களாக நடந்து வந்த ராணுவ வீரர்-வீராங்கனைகளின் பயிற்சி தற்போது நிறைவடைந்துள்ளது. அதன்பின் பயிற்சி முடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த நிறைவு விழாவில் வீரவாளை பரிசாக ஏ. விஷ்வா குமார் பெற்றுள்ளார். பிறகு நேகா சர்மாவுக்கு தங்கப்பதக்கமும், கிருஷ்ணகுமாருக்கு வெண்கல பதக்கமும் மற்றும் அபிநவுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 1955-ஆம் வருடம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுமிதா சதுவேதி என்ற பெண் முதல் ராணுவ அதிகாரியாக பரங்கிமலையில் பயிற்சி பெற்று ராணுவ அதிகாரியாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் தன்னுடைய சொந்த மகனான ரஜத் ரஞ்சன் கெரோனை பரங்கிமலையில் சேர்த்து ராணுவ அதிகாரியாக மாற்றியுள்ளார். பின்னர் மகனை ராணுவ அதிகாரியாக சேர்த்தது குறித்து சுமிதா சதுர்வேதி கூறியதாவது, என்னுடைய மகனும் ராணுவ அதிகாரியாக சேர்ந்ததில் பெருமை கொள்கிறேன். என் மகன் எங்கள் தலைமுறையில் மூன்றாவது அதிகாரியாக தேர்வாகி இருக்கிறான். மேலும் ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த என்னுடைய  மகன் ராணுவத்தில் சிறந்த சேவை ஆற்றுவார் என கூறியுள்ளார்.

Categories

Tech |