ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கஜகஸ்தானில் உள்ள ஜம்லி மாகாணத்தில் பைசக் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருக்கும் ராணுவ தளத்தின் ஒரு அறையில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென அந்த அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. இதனால் தீயானது ராணுவத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியுள்ளது.
மேலும் இந்த வெடி விபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட மொத்தம் 6௦ பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வெடிவிபத்து தீவிரவாத அமைப்பினரால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.