திருமணத்தை முன்னிட்டு வீச்சரிவாள் உடன் பேனர் வைத்த ராணுவ வீரர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் தனது உறவினர் வீட்டில் திருமணத்திற்காக ஊருக்கு வந்துள்ளார்.அப்போது திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் சுரேஷ் வீச்சரிவாளுடன் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ராணுவ வீரரான சுரேஷ் மற்றும் அச்சக உரிமையாளரான சங்கர நாராயணனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.