ராணுவ கல்லூரியில் நடந்து துப்பாக்கி சூட்டில் இரண்டு வீரர்கள் பலியாகி உள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கில் ராணுவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி நேற்று வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. அந்த சமயத்தில் கல்லூரியில் பணியில் இருந்த 59 வயதுள்ள ராணுவ வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியுள்ளார். இதில் மூன்று வீரர்களின் உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனை அடுத்து துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த மூன்று வீரர்களை சக வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மற்றொரு வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிய ராணுவ வீரர் சிறிது நேரத்தில் தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து கைதானவரை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.