கொலம்பியா ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
கொலம்பியாவில் அராகிட்டா நகராட்சி பகுதியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் .இதையடுத்து படுகாயமடைந்த 6 பேர்சிகிச்சைக்காக அருகில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்நாட்டு ராணுவம் இரங்கலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராணுவத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான கோழைத்தன செயல் என்று கொலம்பிய அதிபர் இவான் டக் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.