Categories
உலக செய்திகள்

“கிராம மக்கள் 11 பேர்”…. ராணுவ வீரர்களின் கொடூரச் செயல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மியான்மரில் ராணுவ வீரர்கள் கிராம மக்கள் 11 நபர்களை உயிரோடு எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை முறியடித்து அந்நாட்டு ராணுவம்  கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில் முதல் அந்நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிவரும் ராணுவம், இதுவரையிலும் 1,300-க்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளது.

இதனிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராட்டம் மேற்கொண்டு வரும் அதே வேளையில் ஒரு சிலர் ராணுவத்துக்கு எதிராக ஆயுதத்தை ஏந்தி வருகின்றனர். இந்த நிலையில் மோனிவா நகரில் அணிவகுத்துச் சென்ற ராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனையடுத்து ராணுவ வீரர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு நுழைந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள்  11 நபர்களை ராணுவ வீரர்கள் உயிருடன் எரித்துக் கொன்றதாக தெரிகிறது. இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து ராணுவம் எந்த விளக்கம் கொடுக்கவில்லை. இதற்கு முன்பாக கடந்த 5-ம் தேதி யாங்கூன் நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது ராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |