Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாக்கு எண்ணிக்கை முடிந்து…. ஊர் திரும்பிய துணை ராணுவப்படை வீரர்கள்…. பூங்கொத்து கொடுத்து வழியனுப்பிய காவல் அதிகாரிகள்….!!

துணை ராணுவப் படை வீரர்கள் ஊர் திரும்பிய போது காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கே.வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு, பாலிடெக்னிக் கல்லூரியில் துணை கமாண்டர் பங்கஜ்குமார்ராம் தலைமையில், துணை ராணுவபடை வீரர்கள் 97  பேர் கடந்த 8ம் தேதியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதால் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களை ராஜஸ்தான் முகாமிற்கு வழியனுப்பும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வேலூர் காவல் அதிகாரிகள் துணை ராணுவப்படை வீரர்களின் பணிகளை பாராட்டி பூங்கொத்து கொடுத்து அவர்களை வழியனுப்பி வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் துணை காவல்துறை அதிகாரி சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன் உட்பட காவல்துறையினர் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Categories

Tech |