Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கில் பல வாலிபர்களுடன் நட்பு… பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை… சிறையில் அடைக்கப்பட்ட 7 குற்றவாளிகள்…!!

பிளஸ் 1 மாணவி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதியில் வசிக்கும் பிளஸ்-1 மாணவி பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் கணக்கு தொடர்ந்து பல வாலிபர்களுடன் நட்பாக பழகி உள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அந்த மாணவி மாயமாகிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து புளியம்பட்டி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மாணவியை தேடி வந்த நிலையில், மாணவி வீடு திரும்பிவிட்டார். அப்போது போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த மாணவியை வாலிபர்கள் சிலர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகமான ஹிரிடே என்ற வாலிபர் அந்த மாணவியை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றதோடு, அவரது நண்பர்களுடன் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து அந்த மாணவி தப்பித்து அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஹிரிடே, ஜெயகிருஷ்ணன், அபிஜித், ரபிக், முகம்மது நபால், அகமது ஷா மற்றும் முகமது சாஜத் போன்ற ஏழு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |