Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

70 வயது மூதாட்டியை கற்பழித்த சைக்கோ… வாலிபரின் வெறிச்செயல்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

70 வயது மூதாட்டியை வாலிபர் மருத்துவமனை வளாகத்திற்குள் வைத்து கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காலடிப்பேட்டை மார்க்கெட் லேன் பகுதியில் 70 வயது மூதாட்டி அவரது வீட்டிற்கு வெளியே இரவு 10 மணிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த இடத்திற்கு ஒரு மர்ம நபர் வந்துள்ளார். அவர் அந்த மூதாட்டியிடம் பேசிக் கொண்டே அவரை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அழைத்து சென்று அந்த மூதாட்டி மிரட்டி கற்பழித்துள்ளார். அதன்பின்னர் அந்த வாலிபர் மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மூதாட்டி அலறி துடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு உடனடியாக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அதன்பின் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மூதாட்டிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் சம்பவம் நடந்த இடத்தில் மின்விளக்கு வசதிகள் இல்லை எனவும், பழைய வாகனங்களை அப்புறப்படுத்தாமல் அந்த இடத்திலேயே விட்டுள்ளதால் அதனை சாதகமாக பயன்படுத்திய சைக்கோ வாலிபர் அந்த மூதாட்டியை கற்பழித்து அவரது தலையில் கல்லை போட்டு தப்பியோடியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அந்த வாலிபரின் முகம் சரியாக தெரியவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |