Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்தியா வந்தடைந்த ரஃபேல் விமானங்கள்… பூக்கள் தூவி வரவேற்ற பாஜகவினர்..!!

ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளதை மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு பூக்களைத் தூவி வரவேற்றனர்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்திருக்கின்றது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் விரைவில் சேர்க்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதை கொண்டாடக் கூடிய வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்து மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

அதே சமயத்தில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு வரவேற்பு அளித்தனர். ரஃபேல் விமானமாக ட்ரோன் கேமராவை கருதி பூக்களைத் தூவி வரவேற்றார்கள். இந்த நிகழ்ச்சியானது மயிலாடுதுறை நகர பாஜக தலைவர் மோடி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ராஜேந்திரன் மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் உள்ளிட்ட கட்சியினர் அனைவரும் பங்கேற்றனர்.

Categories

Tech |