Categories
தேசிய செய்திகள்

கொரோனவை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது: ஐசிஎம்ஆர்!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட 80% பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’ இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. இந்த நிலையில் இந்த கிட்கள் நேற்று தமிழகத்தை வந்தடைந்தன.

தமிழ்நாடு சுகாதாரத் துறை ஆர்டர் செய்த 5,00,000 கிட்களில் 24,000 கிட்களும் மத்திய அரசுக்கு வந்த கிட்களில் 12 ஆயிரம் கிட்களும் இன்று தமிழகத்தை வந்தடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதேபோல், கொரியாவில் இருந்து 5 லட்சம் ரேபிட் கிட்கள் இறக்குமதி செய்ய ஏற்கனவே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தன.

அதற்கான ஒப்பந்தமும் இன்று கையெழுத்தாகி இருந்தது. ஏப்ரல் 30ம் தேதியில் இருந்து 4 கட்டமாக மேலும் 5 லட்சம் ரேபிட் கிட்கள் வரக்கூடும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு விதிமுறைகள் ஒழுங்காக கடைபிடித்தால் மக்கள் மீட்பு விகிதத்தி மேம்படுத்திவிடலாம் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான 80% பேருக்கு தற்போது அறிகுறிகள் தென்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |