கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமத்திலிருந்து 500 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் வத்திராயிருப்பு பகுதிக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாலை நேரத்தில் போதிய அளவு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.
இதனை அடுத்து குறைந்த அளவில் பேருந்து இயக்கப்படுவதினால் கூட்டத்தில் மாணவர்களால் சமூக இடைவெளி மற்றும் முககவசத்தை பின்பற்ற முடியவில்லை. இதனால் கொரோனா பரவல் அபாயம் இருப்பதினால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தங்களின் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.