பாகிஸ்தான் நாட்டிற்குள் சர்வதேச எல்லை வழியே அரிய வகையான மான் சென்ற நிலையில் காட்டு நாய்கள் அதனை கடித்துக் கொன்றுள்ளது.
சாம்பல் நிறத்திலான மான்கள் மிகவும் அரிதாக இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் தென்படுகிறது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு, இந்த மான் வகையை அழியக்கூடிய உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் இணைந்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் காடுகளின் வழியே பாகிஸ்தானிற்கு, சென்ற அரிய வகையான சாம்பல் நிறத்திலான மானை, அங்கிருந்த காட்டு நாய்கள் கடித்து குதறியுள்ளது.
இதில் பலத்த காயங்களுடன் அந்த மான், கசூர் நகரிலிருக்கும் ஹவாலி படியானாவாலி என்ற கிராமத்திற்கு அருகில் அலைந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த மக்கள், அந்த மானுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கவில்லை.
மேலும், மக்கள் அந்த மானுக்கு தவறான முறையில் சிகிச்சை செய்துள்ளனர். இதனால் அந்த மான், பரிதாபமாக பலியானது. அதன் பின்பு வனத்துறை அதிகாரிகள் இறந்த மானை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்