ஒரு வீடியோவில் வித்தியாசமான உருவம் கொண்ட பேரெல் ஐ என்ற அரிதான ஒரு மீன் தென்பட்டிருக்கிறது.
மாண்டேரி பே அக்குவாரியம் என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள், இந்த மீன் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்கள். அதாவது இந்த மீன் இனம் ஒளி ஊடுருவும் உடல் அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த மீனிற்கு, பெரிதான தலையும், கண்கள் பச்சை நிறமாகவும் இருக்கிறது. அதாவது, மாண்டேரி பே அக்குவாரியம் என்ற ஆய்வு நிறுவனம் பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் ஆய்வு மேற்கொள்ள வெகு தூரத்திலிருந்து செயல்படக்கூடிய தங்களது வாகனத்தை அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த வாகனமானது, சுமார் 650 மீட்டர் ஆழத்தில் இருந்த போது அந்த மீன் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த வாகனம் பதிவு செய்த வீடியோ சுமார் 27600 மணி நேரங்கள் ஓடுகிறது. ஆனால் அந்த மீன், ஒன்பது தடவை தான் அதில் காணப்படுகிறது. அந்த ஆய்வு நிறுவனம், அந்த மீன் தென்படும் வீடியோவை யூடியூபில் பதிவிட்டிருக்கிறது.
அந்த மீனின் கண்களுக்கு உணர்திறன் இருப்பதாகவும், ஒளி ஊடுருவும் தலையை கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் மீன்கள் தன் கண்களை மேல்புறம், நேராக மற்றும் தலைக்கு முன்புறமும் நிலையாக வைக்கக்கூடிய திறனை கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.