சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA சென்னை) வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நூலகர், எம்.டி.எஸ் (MTS), எல்.டி.சி (LDC) பதவிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 77 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு www.indianarmy.nic.in என்ற இணையதளம் சென்று பிப்ரவரி 05 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10/ 12/ டிகிரி/ டிப்ளமோ முடித்திருப்பவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
வயது வரம்பு: 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: கமாண்டன்ட், ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, எஸ்.டி தாமஸ் மவுண்ட், சென்னை – 600016 என்ற முகவரிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை பார்த்துத் தெரிந்துக் கொள்ளவும் https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/01/OTA-Chennai-Recruitment-2021-77-LDC-MTS-Posts-2-scaled.jpg