ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று நோட்டா பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நோட்டா பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் “ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. அதனை மீறி பயன்படுத்தினால் அதற்கான விளைவை ரஷ்யா தர வேண்டி இருக்கும். பிற நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் அல்லது வேறு வழிகளில் உதவினால் உக்ரைன் மீதான கொடூர போரை தொடங்க வழி வகுக்கும். இந்தப் போரினால் உயிர் சேதம், துன்பம் மற்றும் பெரும் அழிவு ஏற்படுத்தும்.
இந்த நிலையில் சீனா சர்வதேச சட்டத்தை நிலைநாட்ட கடமைப்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் சீனாவை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சீனா உலகின் மற்ற நாடுகளுடன் சேர வேண்டுமெனில் ரஷ்யாவின் கொடூரமான ஆக்கிரமிப்பை கண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.