ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வாய்த்த மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள வல்லம், பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாங்காய் குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பிரானூர் பார்டரில் உள்ள ஒரு குடோனில் மாம்பழங்களை ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைத்ததும், மேலும் அவை எளிதில் கெடாமல் இருப்பதற்காக ரசாயன ஸ்பிரே அடித்திருப்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் சுமார் ஒரு டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை மண்ணில் குழிதோண்டி புதைத்து அழித்தனர்.