தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா, சங்கத் தமிழன், துக்ளக், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ராஷிகண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.