Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விவசாயம் செய்யும் ராஷ்மிகா…. இணையத்தைக் கலக்கும் வீடியோ…!!

முன்னணி நடிகை ராஷ்மிகா விவசாயம் செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

அடுத்தடுத்து பல பிரபல நடிகர்களுடன் நடித்து இப்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா விவசாயம் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CMhdl3fJWb9/

Categories

Tech |