தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக மாறிய ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இந்த படத்திற்குப் பிறகு டியர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்தினர். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி படங்களில் நன்றாக இருக்க நிஜமாகவே இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தங்கள் காதல் தகவலை உறுதிப்படுத்த வில்லை. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர கொண்டாவுக்கு திருமணம் முடிந்தது போன்ற புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த பலரும் ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை. அதாவது விஜய் தேவர கொண்டா மற்றும் ராஷ்மிகாவுக்கு திருமணம் செய்தது போன்று போட்டோவை எடிட் செய்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.