Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் ஃபார்முக்கு வந்த ராஷ்மிகா”…. இல்ல இல்ல கிர்ஷ்மிகா…. போட்டாவால் கிறங்கிப்போன ரசிகாஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் ரிலீஸ் ஆன கீதாகோவிந்தம் திரைப்படம் ராஸ்மிகாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. சமீபத்தில் ரிலீசான புஷ்பா படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. இவர் தற்போது தமிழில் நடிகர் விஜயுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன காந்தாரா திரைப்படத்தை ராஷ்மிகா பார்க்கவில்லை என்று கூறியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதனால் கன்னட ரசிகர்கள் பலரும் ரஷ்மிகாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். இதன் காரணமாக நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாவில் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்திருந்தார். இந்த பிரச்சனைக்கு பிறகு நடிகர் ராஷ்மிகா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதாவது பிரச்சனைகள் அனைத்தும் ஓரளவு முடிந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்து விட்டார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ராஷ்மிகா கிடையாது கிர்ஷ்மிகா என்று கமெண்ட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

Categories

Tech |