வான்வெளியில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகரில் விமானம் ஒன்று வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் பயணித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விமானம் வான்வெளியில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென தீ பிடித்துள்ளது. மேலும் அந்த விமானம் தீப்பிடித்தபடியே சிறிது தூரத்திற்கு தாழ்வாக பறந்து அங்கிருந்த ஒரு காட்டு பகுதிக்குள் விழுந்துள்ளது.
இதனையடுத்து அந்த விமானம் வேகமாக தரையில் மோதி வெடித்து சிதறியுள்ளது. அதனால் அப்பகுதியில் வானுயுரத்துக்கு கரும்புகை எழுந்துள்ளது. இந்த பயங்கரமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானம் தீப்பிடித்து படியே வானில் பறந்து காட்டு பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.