Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

ரஷ்யாவின் “கொரோனா தடுப்பு மருந்து”…. மறுஆய்வு செய்யவேண்டும் – உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மறுஆய்வு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளது.

 

2000 பேருக்கு புதன்கிழமையன்று இறுதிக்கட்ட பரிசோதனை தொடங்கவிருந்த நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தடுப்பூசிக்கு ஒப்புதல் கொடுத்த முதல் நாடாக ரஷ்யாவை செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தார். உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 150க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தற்போது 28 தடுப்பூசிகள் மட்டுமே மனிதர்கள் மீது தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளது.

இவற்றில் 3வது மற்றும் இறுதிக்கட்ட பரிசோதனையை 6 தடுப்பூசிகள் மட்டுமே எட்டியுள்ளது. மக்களிடையே பெரிய அளவில் சோதனை மேற்கொள்வது தடுப்பூசியின் இறுதிக் கட்டமாகும். ரசியாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கிய தடுப்பூசி, மருத்துவ மதிப்பீட்டின்படி மனிதர்கள் மீது தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வரும் 28 தடுப்பூசிகளை இதுவும் ஒன்றாகும். ஆனால் உலக சுகாதார அமைப்பால் உருவாக்கப்பட்ட பட்டியலில் இது முதற்கட்ட சோதனையில்தான் உள்ளது.

 

இந்த நிலையில் ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ள உலக சுகாதார மையம் சோதனைகளின் விபரங்களை மறு ஆய்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் அனைத்து முன்னேற்றத்தையும் உலக சுகாதார நிறுவனம் வரவேற்கிறது. தடுப்பூசி ஆராய்ச்சியை உபயோகப்படுத்தும் போது,வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறுவப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கடைசியில் உற்பத்திக்கு செல்லும் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உலக அளவில் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். மேலும் உலகம் முழுவதும் இதுபோன்ற தடுப்பூசிகள் விரைவாகவும், நிதானமாகவும், சமமாகவும் கிடைக்க வேண்டும் என சுகாதாரத்துறை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |