Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் கோரிக்கை… கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை…!!!

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ‘பாரதி கண்ணம்மா ‘சீரியல் நடிகை தனது கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் பரினா ஆசாத் . இவருடைய கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருப்பதால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் . மேலும் நடிகை பரினா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பதால் இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது .

சமீபத்தில் நடிகை பரினாவுக்கு திருமணமான நிலையில் அவரது கணவரின் புகைப்படத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பரினா ஆசாத் தனது கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் . இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |