Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ரசிகர்களுடன் நட்பாக பழகுவார்’… புத்தகத்தில் விஜய்யை புகழ்ந்த பிரியங்கா சோப்ரா…!!!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது புத்தகத்தில் நடிகர் விஜய் குறித்து எழுதியுள்ளார் .

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ‘அன்பினிஷ்டு’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி அதில் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்துள்ளார் . அந்த புத்தகத்தில் நடிகர் விஜய்யுடன் தான் நடித்த முதல் படம் குறித்த அனுபவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார் . அதில் ‘கடந்த 2000-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பின்னர் திரையுலகில் நுழைந்தேன் . நான் முதலில் நடித்த தமிழ் திரைப்படம் ‘தமிழன்’ . தளபதி விஜய் என் முதல் கதாநாயகன் .

Image result for priyanka chopra unfinished book vijay

அவரின் பணிவு மற்றும் ரசிகர்களுடன் அவர் நட்பாக பழகும் விதம் ஒரு நல்ல எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது . பல வருடங்களுக்குப் பின் எனது வெப் தொடரான குவாண்டிகோவின் படப்பிடிப்பிற்காக நியூயார்க் நகர் சென்றிருந்தேன். என் வருகையை அறிந்த ரசிகர்கள் என்னுடன் புகைப்படம் எடுக்க திரண்டனர் . மதிய உணவு இடைவேளையின் போது நான் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன் . அது எனது முதல் பட நடிகர் விஜய் எனக்கு கற்றுத் தந்த பாடம்’ என்று எழுதியுள்ளார் .

Categories

Tech |