சின்னத்திரை நடிகை ரக்ஷிதா தனது ரசிகரின் வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் .
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர் நடிகை ரக்ஷிதா . இவர் நடித்த சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம் ,நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் உப்புக்கருவாடு என்ற படத்திலும் நடித்துள்ளார் . இந்நிலையில் நடிகை ரக்ஷிதா தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் .
பின்னர் ரக்ஷிதா மாற்றுத்திறனாளி இளைஞரான அந்த ரசிகருக்கு தான் வாங்கி வந்த இனிப்புகளை ஊட்டிவிட்டிருக்கிறார் . இதையடுத்து ரக்ஷிதா அந்த ரசிகருக்கு புத்தாடை வழங்கி அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . காண்போரை நெகிழ வைக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .