Categories
இந்திய சினிமா சினிமா

“உங்களுக்கு தாராள மனசு தான் பா”…. ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் கொடுத்த விஜய் தேவரகொண்டா…. என்ன தெரியுமா?….!!!!!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா கடைசியாக நடித்த லைகர் திரைப்படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. எனினும் அவர் குஷி திரைப்படத்தில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதை சென்ற 5 வருடங்களாக அவர் செய்து வருகிறார்.

அதன்படி இந்த வருடம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ரசிகர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறார். இது தொடர்பாக விஜய் தேவரகொண்டா கூறியதாவது ” நடப்பு ஆண்டு சிறப்பான ஒரு ஐடியா வைத்திருக்கிறேன். அதாவது, ரசிகர்களில் 100 பேரை விடுமுறை கொண்டாட்டத்துக்கு சுற்றுலா தலத்துக்கு அனுப்ப போகிறேன். அதற்குரிய அனைத்து செலவுகளும் செலுத்தப்பட்டுவிடும். இதனிடையில் எந்த இடம் என தேர்வு செய்ய எனக்கு உதவி செய்யுங்கள்” என குறிப்பிட்டு உள்ளார். இதன் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |