Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (25-08-2020) நாள் எப்படி இருக்கும்…?ராசிபலன் இதோ…!!!

நாளைய பஞ்சாங்கம்

25-08-2020, ஆவணி 09, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பகல் 12.22 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.

 விசாகம் நட்சத்திரம் பகல் 01.58 வரை பின்பு அனுஷம்.

 மரணயோகம் பகல் 01.58 வரை பின்பு சித்தயோகம்.

 நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.

 கரி நாள்.

 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 

நாளைய ராசிப்பலன் –  25.08.2020

மேஷம்

இன்று இந்த ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை உண்டாக நேரலாம். தேவையற்ற செலவு கூடும். வீட்டில் இருப்பவர்களிடம் வீண் பேச்சை தவிர்க்கவும். பணம் விஷயங்களில் கவனம் கூடுதலாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எதிர்பார்க்காத திடீர் பணவரவு வரும். நல்ல மதிப்பை பெறுவீர்கள் வீட்டில் இருப்பவர்களிடம். நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் வெளியூர் பயணங்களால். இதுவரை வராத பண பாக்கி கைக்கு வந்து சேர வாய்ப்பு.

மிதுனம்

இன்று பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி வரும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் கேற்ப பலன் உண்டு. உடல்நல பாதிப்பு குறையும். உத்தியோகத் துறையில் போட்ட திட்டம் நடக்கும். கடன் கொடுத்த காசை திரும்ப பெறலாம்.

கடகம்

இன்றைக்கு உங்கள் பொருளாதார நிலை சமநிலையாக இருக்கும். இன்றைக்கு வீட்டில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் கூடும். அனுபவமிக்க அறிவுரை தொழிலுக்கு உதவும். தொழிலில் நம்முடன் பணி செய்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். வீண் செலவு குறையும்.

 

சிம்மம்

உங்களுக்கு இன்று எதிர்பாராத செலவு கூடும். தேடிய உதவி கிடைப்பது கொஞ்சம் தாமதமடையும். அக்கம்பக்கத்தினர் வருகை சிறிது மகிழ்ச்சியை தந்தாலும் சிறிது கவனம் வேண்டும். புதிய பொருள் வாங்கி விரும்புவீர்கள்.

கன்னி

வீட்டில்  குழந்தைகள் மூலம் தேவையற்ற செலவு ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு புதிய தொழில் கிடைக்கும். நண்பர்களிடம் அனுகூலம் கிடைக்கும். பெரியவர்களின் சந்திப்பு மனதில் சந்தோஷத்தை தரும்.

துலாம்

இன்று  குழந்தைகளின் உடல் சீற்றத்தில் சிறிது பாதிப்பு கூடலாம். திருமணத்தில் தாமதம் உண்டாகும். சந்தோசத்தை கூட்டும் நண்பர்களின் சந்திப்பு. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடைய வாய்ப்பு.

விருச்சிகம்

பொருளாதாரத்தில் இன்று உங்கள் நிலை நல்லதாகவே இருக்கும். சுப செலவு வீட்டில் உண்டாகும். உதவியாக செயல்படுவார்கள் உடன் பிறந்தோர். தொழில் செய்பவர் உயரதிகாரிகளின் பாராட்டையும் ஆதரவையும் பெறுவர். வியாபாரத்தில் பிரச்சனை குறையும் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் சோர்வாக செயல்படுவீர்கள். தேவையற்ற வாக்குவாதம் வரலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரும். நன்றாக சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர் ஆதரவு மன அழுத்தத்தை குறைக்கும்.

மகரம்

எந்த ஒரு வேலையையும் துணிவோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர். செய்த தொழில் கேட்ப ஊதியம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை உண்டாகும். தொழிலில் லாபம் விருத்தி அடையும். நல்ல செய்திகள் வந்துசேரும் உறவினர் வழியில்.

கும்பம்

மனதில் உள்ள குழப்பங்கள் விலகி நிம்மதி ஏற்படும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் நல்ல நிலை அடைவீர். நல்ல பலனை எதிர்பார்க்கலாம் சுபகாரியங்களில். உடன்பிறந்தோர் உதவியிருக்கும்.

மீனம்

புதிய தொழில் தொடங்க சாதகமாக பலன் கிட்டும். வீண் அலைச்சல் உண்டாகலாம் தொழில் ரீதியில். உறவினர்களிடம் அனுசரித்து சென்றால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும்.  புதிய பொருட்களை வாங்க ஆர்வமாக இருப்பீர்கள்.

Categories

Tech |