சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஏன் தக்கவைக்கப்படவில்லை என்பது குறித்து ஹைதராபாத் அணி விளக்கமளித்துள்ளது .
2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள்அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் வெளியிட்டுள்ளது .இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், அப்துல் சமத் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளன .ஆனால் இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அணியில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரியான கே ஷம்மி கூறும்போது, “இது ஒரு கடினமான முடிவு. வீரர் ஒருவர் ஏலத்தில் இருக்க விரும்பினால் அவருடைய விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம்.ஏலத்தில் சரியான விலையில் அவரை எடுக்க முடியுமா என பார்ப்போம் .அதோடு ரஷித் கான் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் அவரை அணியில் தக்க வைக்கப்படவில்லை “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.