ரஷ்யா தனது இராணுவ படைகளை உக்ரேன் மற்றும் கிரிமியாவிற்கு அருகே குவித்துள்ள செயற்கைக்கோள் படங்களை அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை உக்ரைனிடமிருந்து பிரித்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான மேக்ஸ்சார் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி எடுத்த செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டுள்ளது.
இதில் ரஷ்யா 100 க்கும் மேலான ராணுவ வாகனங்களையும், டாங்கிகளையும் கிரிமியாவிலுள்ள தளத்தில் நிறுத்தியுள்ளது. ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் எடுத்த புகைப்படத்தில் மேல் குறிப்பிட்டுள்ள கிரிமியா தளம் பாதியளவு வெறும் இடமாக உள்ளது.
இதற்கிடையே ரஷ்யா தன்னுடைய படைகளை உக்ரைனுக்கு அருகில் குவித்த நாள் முதலில் இருந்து அந்நாட்டிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் தங்களது எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து ரஷ்யா தற்போதைய இந்த செயலுக்கு தங்களது விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது ரஷ்யாவின் ராணுவ படைகளை தங்களது எல்லைக்குள் நிறுத்துவதற்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளது.