உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.
உக்ரைன் மீது ரஷ்ய மாதக்கணக்கில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷ்யாவின் இந்த தாக்குதல்களுக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து மிகப்பெரிய உக்ரைன் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி, ரஷ்யாவுக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்சிலோனா நகர மையத்தில் ஒன்று கூடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைமையகத்திற்கு முன்னால் பேரணியாக அணிவகுத்து சென்றனர்.