Categories
உலக செய்திகள்

ரஷ்யா கொரோனா தடுப்பூசி…அமெரிக்க மந்திரி கேள்வி…!!!

கொரோனாவிற்கு எதிரான ரஷிய தடுப்பூசி மீது அமெரிக்க மந்திரி சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ரஷியா உருவாகியுள்ளது. ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்த தரவுகள் வெளியிடப்படாத நிலையில், தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார், அது பற்றிய சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். இது குறித்து  தைபேயில் அவர் கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, முதலில் யார் உருவாக்குகிறார்கள் என்பது போட்டி இல்லை.
அமெரிக்காவில் 2 மருந்து நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மூன்றாவது கட்ட பறிசோதனையை கடந்துள்ளன. ஆனால் ரஷிய தடுப்பூசி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் அந்த நிலைக்குள் நுழைகிறது. அமெரிக்க தடுப்பூசி செயல்முறைகள், தங்கம் போன்ற தரமான, பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியை கோடிக்கணக்கான டோஸ்கள் தயாரிப்பதற்கு அனுமதி அளிக்க  வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |