ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ருட்னெவ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் துணை பிரதமராக யூரி ட்ருட்னெவ் இருந்து வருகிறார். ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின் கிழக்கு பகுதிகளுக்கு செல்லவிருந்த பயணத்தின் ஒரு பகுதியாக ட்ருட்னெவும் அங்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தார். அந்த பயணத்திற்கு முன்பு ட்ருட்னெவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனால், அவரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,02,701 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை ரஷ்யாவில் 15,231 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.