முதல் முறையாக டெல்லியில் டீசலின் விலை பெட்ரோலின் விலையை விட அதிகரித்துள்ளது
இன்று 18 நாலாவதாக எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டதால் பெட்ரோலை விட டீசல் முதல்முறையாக அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. பெட்ரோலின் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் டீசலின் விலை 48 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்றைய டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 79.88 ஆகவும் பெட்ரோலின் விலை ரூபாய் 79.76 ஆகவும் உள்ளது. கடந்த 18 நாட்களில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10.48 ரூபாயும் மற்றும் 8.50 ரூபாயும் அதிகரித்துள்ளது.
2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி டெல்லியில் டீசலின் விலை 40.91 பெட்ரோலின் விலை 71.16 ஆகவும் இருந்தது. அதே ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி டீசலின் விலை ரூபாய் 45.28 ஆகவும் பெட்ரோலின் விலை ரூபாய் 76.45 இருந்தது. மார்ச் மாதம் 14ஆம் தேதி அரசு டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் ஆகவும் பின்னர் மே 5ஆம் தேதி டீசலுக்கு லிட்டருக்கு ரூபாய் 13 ஆகவும் பெட்ரோலுக்கு ரூபாய் 10 ஆகவும் உயர்த்தியது.
இந்த இரண்டு உயர்வுகளும் வரி வருவாயில் அரசுக்கு ரூபாய் 2 லட்சம் கோடியை கொடுத்துள்ளன. அரசு நடத்தி வரும் எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் தொடர்ந்து 12 ஆவது நாளாக பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளன. கொரோனா தொற்றின் இடையே 82 நாள் கழித்து அவர்கள் செலவுகளுக்கு ஏற்ப சில்லறை விகிதங்களை சரி செய்துள்ளனர். மற்ற மாநிலங்களிலும் விலை உயர்வு இருக்கும். ஆனால் அங்கு விதிக்கும் குறைந்த வரியின் காரணமாக டீசலின் விலை மலிவாகவே உள்ளது. இருந்தாலும் பெட்ரோல் டீசல் விலை இடையே இருக்கும் இடைவெளி மேலும் சுருங்கிவிடும்.